ஹீரோ அவதாரம் எடுத்த லோகி…! டீசர் வேற மாதிரி இருக்கே…
இன்றைய காலக்கட்டத்தில் நடிகர்கள் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் மாறுகின்றனர்.
அதேபோல் இயக்குனர்களும் நடிகர்களாக அவதார எடுக்கின்றனர்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் DC படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
லோகி இதற்கு முன்னர் ஸ்ருதி ஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
DC படத்தின் டைட்டில் டீசரில் கையில் கத்தியுடன் முகம் முழுக்க ரத்தத்துடன் லோகேஷ் நடந்துவருகிறார். மறுபக்கம் வாமிகா கபியோ கையில் காண்டத்தோடு நடந்துவருகிறார்
அதேசமயம் லோகேஷின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அட்டகாசமாகவும் இருக்கிறது. இப்படமானது அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.





