மால்டோவாவுக்குச் பயணம் மேற்கொண்ட டேவிட் கேமரூன்
உக்ரைன் பயணத்திற்குப் பிறகு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் மால்டோவாவுக்குச் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மால்டோவன் ஜனாதிபதி மியா சாண்டு, பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இருவரும் வியாழக்கிழமை இரவு சந்தித்ததாகக் கூறியுள்ளார்.
கருங்கடல் பாதுகாப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாடு குறித்து நாங்கள் விவாதித்தோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“உக்ரைனுக்கு இங்கிலாந்து அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தேன்” என்றும், “மால்டோவாவின் பாதுகாப்பு மற்றும் ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு இந்த ஆதரவு முக்கியமானது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)