அமெரிக்காவில் மகள் திருமணம்; விசா இன்றி கலந்து கொண்ட இந்திய பெற்றோர்..!
விருந்தினர் விசா கிடைக்காததால் மகளது திருமணத்திற்கு செல்ல புதிய வழியை கண்டுபிடித்த, பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சுனில் தார் என்பவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருக்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண் மணமகளாக பேசி முடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இருவருக்கு அமெரிக்காவில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அமெரிக்காவின் விருந்தினர் விசாவை பெற சில சமயம் ஓராண்டு கூட ஆகும் என்பதால் விருந்தினர் விசா கிடைப்பதில் பெண்ணின் பெற்றோருக்கு சிக்கல் உண்டானது.
இதனால் மணமகளது பெற்றோருக்கு திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத சூழல் உண்டானது.இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுத்தனர். மேலும் பெண்ணின் பெற்றோருக்கும் எப்படியாவது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென ஆசையிருந்திருக்கிறது.அதன்படி இருவீட்டாரும் எடுத்த முடிவின்படி வாஷிங்டன் நகரிலுள்ள பிளெய்ன் நகரில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இப்பகுதி கனடா மட்டும் அமெரிக்கா எல்லையில் உள்ள நிலப்பகுதியாகும். அங்கிருந்த பூங்கா ஒன்றில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். இந்த பகுதி அமெரிக்கா மற்றும் கனடா நாட்டினர் குடியுரிமையின்றி உரையாடிக் கொள்ளும் பொதுவான இடமாகும்.
கனடா விசா ஏற்கனவே வைத்திருந்த பெற்றோர் அதன் மூலம் கனடா வழியாக அமெரிக்கா எல்லையிலுள்ள பிளைய்ன் நகருக்கு வந்துள்ளனர். இந்த நகரிலுள்ள பூங்காவில் மணமக்கள் இருவரது பெற்றோரின் தலைமையில் திருவிழா நடைபெற்றுள்ளது.
மேலும் தம்பதியினர் நியூயார்க் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை தான் நடக்க கூடியது. அதில் பெற்றோர்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. எனவே இவ்வளவு சிரத்தையோடு இந்த முன்னெடுப்பை எடுத்தோம்” என கூறியுள்ளனர்.