ஜனாதிபதி – தமிழரசு கட்சி சந்திப்புக்கு நாள் நிர்ணயம் – iftamilலிடம் உறுதிப்படுத்தினார் சாணக்கியன்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதியளவில் நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் www. iftamil.com யிடம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றியே இதன்போது கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடக்கும் எனவும், நல்லிணக்க சமிக்ஞையாக வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் விலகி இருப்பதற்கு தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது எனவும் சாணக்கியன் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சந்திப்புக்குரிய திகதி விபரம் பற்றி அவரிடம் இன்று iftamil வினவியது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.





