ஜப்பானை நெருங்கும் ஆபத்தான சூறாவளி – விமானச் சேவைகள் இரத்து – தொழிற்சாலைகள் மூடல்
ஜப்பானின் தென்-மேற்கு வட்டாரத்தை கடும் சூறாவளி நெருங்கி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள தயாராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அந்தப் பகுதியைக் கடந்த சூறாவளிகளில் ஷான்ஷான் சூறாவளி மிகவும் கடுமையாக இருக்கலாம் என அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர்.
சூறாவளி கடக்கவிருக்கும் பாதையில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Toyota போன்ற பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை மூடியுள்ளன. விமானச் சேவைகள், ரயில் சேவைகள் ஆகியவையும் அடுத்த சில நாள்களுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
சூறாவளியால் வெள்ளம், நிலச்சரிவு, பலத்த காற்று ஆகியவை ஏற்படக்கூடுமென ஆய்வகம் தெரிவித்தது.
வீடுகளைச் சேதப்படுத்தும் அளவிற்குப் பலத்த காற்று வீசலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
கியூஷு (Kyushu) வட்டாரத்தைக் கடந்தவுடன் சூறாவளி வரும் வாரயிறுதியில் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோ உட்பட மத்திய, கிழக்கு வட்டாரங்களை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.