பிரித்தானியா நோக்கிய ஆபத்தான பயணம் – கடலில் மூழ்கிய படகு – ஒருவர் பலி

பிரித்தானியா நோக்கிச் சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸின் பாது கலே கடற்பகுதி வழியாக பிரித்தானியா நோக்கி செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்த நிலையில், திடீரென படகு கடலில் கவிழ்ந்துள்ளது. கடற்படையினர் அழைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.
அகதிகளில் இருவர் தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 13 times, 1 visits today)