கொங்கோ குடியரசில் பரவும் ஆபத்தான தொற்று – 79 பேர் பலி – 300 பேர் மருத்துவமனையில்
கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காய்ச்சல் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டு சுகாதாரத்துறை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமெனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)