சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் காத்திருக்கும் ஆபத்து – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

உலகில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள், தடுப்பூசிகள் மற்றும் விட்டமின்கள் போன்ற மருந்துகள் எங்கும் இல்லை என தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் சரும மருத்துவ நிபுணர், வைத்தியர் இந்திரா கஹாவிட்ட இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட இந்த வகை தடுப்பூசிகள் மற்றும் விட்டமின்களிலுள்ள QR குறியீடுகள் செயல்படாதவை.
அவை நம்பகத்தன்மையற்றவையாக இருக்கக்கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அழகு நிலைய அதிகாரிகள் திசு திரவ சிகிச்சைகள் (injectable treatments) போன்ற முறைகளை சட்டப்படி செய்ய அனுமதிக்கப்படவில்லை.
அவர்கள் வழங்கக்கூடியவை மேலோட்டமான தோல் சிகிச்சைகள் மாத்திரமாகும்.
சருமத்தை விரைவில் வெண்மையாக்கும் நம்பிக்கையில் அதிகப்படியான பாதரசம் (mercury) கொண்ட அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், மிகவும் தீவிரமான சரும சேதம் ஏற்படுகிறது.
இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இது தொடர்பான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், சருமத்தில் கருப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் தோன்றுதல், சருமத்தில் விரிசல்கள் ஏற்படுதல், நகங்கள் பழுப்பு நிறமாக மாறுதல் போன்ற குறுகிய கால சேதங்கள் ஏற்படுகின்றன.
இதனால், ஏற்கனவே உள்ள நீண்டகால சரும பிரச்சனைகள் தீர அதிக காலம் தேவைப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.