ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள ஆபத்து! அதிரடி நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர்
ஜெர்மனி நாட்டில் தற்பொழுது குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த குற்றச் செயல்களில் அரேபிய குழுநிலை குற்றவாளிகள் முன்னிலை பெறுவதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் அண்மை காலங்களாக அரேபிய குழு நிலை குற்றவாளிகள் பல குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை காலமும் லெபனான் குற்றவாளிகள் ஆட்சி செய்வரும் நிலையில் சிரிய நாட்னுடைய அகதிகளும் இவ்வாறான குழு நிலை குற்றவாளி சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள எஸன் மற்றும் கெஸ்றோஸடௌஸர் போன்ற நகரங்களில் இந்த குழு நிலை குற்றவாளிகளுக்கிடையே பாரிய மோதல் இடம்பெற்றது.
தற்பொழுது இரு குழு நிலை குற்றவாளிகளும் தங்களிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியதாக தெரியவந்திருக்கின்றது.
இதேவேளையில் சட்டத்துக்கு புறம்பான அடிப்படையில் இவ்வாறான ஒப்பந்தத்தை நிறைவேற்றியதாகவும்,
இதற்கு எதிராக குறிப்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிராக பொலிஸார் தங்களது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.