பிரான்ஸில் ஏற்பட்டுள்ள அபாயம் – உடனடி நடவடிக்கையில் தீயணைப்பு படையினர்

பிரான்ஸின் தெற்கு பகுதியில் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் தெற்கு பகுதி நோக்கி நோக்கி தீயணைப்பு படையினர் விரைந்துள்ளர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இல் து பிரான்சின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 28 வாகனங்களும் 79 தீயணைப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Bouches-du-Rhône மாவட்டத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Seine மற்றும் Marne மாவட்டங்களுடன் Yvelines, Essonne மற்றும் Val d’Oise ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு படையினரும் ஒன்றிணைந்து பயணித்துள்ளனர்.
அவர்கள் அடுத்து வரும் 10 தொடக்கம் 12 வரையான நாட்கள் அங்கு தங்கி கடமைகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)