அண்டார்க்டிகாவில் ஏற்பட்டுள்ள ஆபத்து – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
அண்டார்க்டிகாவில் 7 லட்சத்து 85 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பனி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ள துருக்கி ஆராய்ச்சியாளர்கள், இரண்டாண்டுகளில் ஹார்ஸ்ஷூ தீவில் பனி உருகும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பனி உருகும் வேகத்தை கட்டுப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றம் மேலும் மோசமடையலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது உருகியுள்ள பனி, துருக்கியின் அளவு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், புவி வெப்பமடைதல் காரணமாக ஏராளமான பனிப்பாறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)