வட அமெரிக்கா

டெஸ்லா கார்களால் ஆபத்து? கடும் நெருக்கடியில் மஸ்க்

உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் பாதுகாப்பு குறைப்பாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை அமெரிக்காவில் விற்பனை செய்த அனைத்து கார்களுக்கும் புதிய அழைப்பை விடுத்துள்ளது.

காரின் கட்டுப்பாட்டு திரையில் உள்ள சில எச்சரிக்கை விளக்குகள் போதிய அளவில் இல்லை என தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் டெஸ்லா இந்த அழைப்பை விடுத்துள்ளது.

டெஸ்லாவின் எஸ், எக்ஸ், வொய், 3, சைபர்டிரக் உள்ளிட்ட அனைத்து கார்களையும் அழைத்துள்ள டெஸ்லா, புதிய மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு துறை, டெஸ்லா கார்களில் பிரேக், பார்க்கிங், பிரேக் விடுவிப்பு ஆகியவற்றைச் சுட்டும் விளக்குகள் போதியளவில் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

முக்கியமான பாதுகாப்பு சார்ந்த தகவல்களை வாசிக்க இயலாததால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜன.8 ஆம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் எதுவும் நிகழவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்