பசியோடு இருக்கும் கரடிகளால் ஆபத்து – ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை
ஜப்பானில் பசியோடு இருக்கும் கரடிகள் மக்களைத் தாக்கக்கூடும் என ஜப்பானின் சுற்றுப்புற அமைச்சு, எச்சரிக்கை விடுத்துள்ளது.
இளவேனிற்காலம் பிறந்ததும் குளிர்கால உறக்கத்திலிருந்து கரடிகள் திரும்பும். அப்போது அவற்றால் ஆபத்து நேரக்கூடும். நேற்று அது குறித்துப் பேச சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் அமைப்புகளும் கூடின.
கரடிகள் காடுகளிலிருந்து வெளியே வருவது குறித்து மாநிலங்களுக்கு அறிக்கை வெளியிட அவை முடிவு செய்துள்ளன. சென்ற ஆண்டு கரடி தாக்கியதில் 6 பேர் பலியாயினர். சுமார் 220 பேர் காயமடைந்தனர்.
தோஹோகு (Tohoku) வட்டாரம் அதிகம் பாதிக்கப்பட்டது. Beech Nut எனும் புங்கங்கொட்டைகளைக் கரடிகள் விரும்பி உண்ணும். சென்ற ஆண்டு அதன் விளைச்சல் குறைவு என்பதால் மக்கள் புழங்கும் இடங்களில் கரடிகள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்தன.
(Visited 3 times, 1 visits today)