செயற்கை நுண்ணறிவால் ஆபத்து – சீனா முக்கிய எச்சரிக்கை
உலகில் வேகமாக வளர்ச்சியடையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு துறைகளிலும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு நுழைந்துள்ளது.
இதனால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய் கொண்டுள்ளன. இந்நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதகுலம் சந்திக்க போகும் இன்னல்கள், சமூக பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய ஜி ஜின்பிங்,“ தேசிய பாதுகாப்பில் சீனா எதிர்கொள்ளும் சிக்கலான, சவலான சூழல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
(Visited 7 times, 1 visits today)