இலங்கையில் ஆண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் ஆண்கள் மத்தியில் உயிர்மாய்ப்பு விகிதங்கள் உலக சராசரியை விட மிக அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
ஆண்களின் மத்தியில் அதிகரித்துள்ள மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகியவையே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்கள் உயிர்மாய்ப்பு விகிதம், ஒரு இலட்சம் ஆண்களுக்கு 27 பேராக கணக்கிடப்பட்டுள்ளது.
பெண்கள் உயிர்மாய்ப்பு விகிதம் ஒரு இலட்சம் பெண்களுக்கு 5 பேராக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விகிதமானது வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது. குறிப்பாக 55 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடமும் மற்றும் இளம் பெண்களில் 17–25 வயதுக்குட்பட்ட பெண்களிடமும் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு 100 மரணங்களில் ஒன்று உயிர்மாய்ப்புக் காரணமாக நிகழ்கிறது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




