பால்டிக் கடலில் மின்சார கேபிள் சேதம் : ரஷ்யாவின் கப்பலை தடுத்து வைத்துள்ள பின்லாந்து!
பால்டிக் கடலில் ஆழ்கடல் பகுதியில் மின்சார கேபிள் சேதமடைந்தமைக்கு ரஷ்யாவின் நிழல் கப்பற்படையின் நாச வேலைகளே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஈகிள் எஸ் கப்பல் ஒன்றை பின்லாந்து அரசாங்கம் தடுத்துவைத்துள்ளது.
105-மைல் கேபிள் 650 மெகாவாட் பரிமாற்ற திறன் கொண்டது மற்றும் பின்லாந்து மற்றும் பால்டிக் மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை இணைக்க சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகும்.
சேதம் மிகவும் கடுமையானது, சரி செய்ய பல மாதங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் நம்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Estlink 2 ஐ கடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு Eagle S கப்பல் அதன் வேகத்தில் கால் பங்காக குறைந்ததாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
அதிகாரிகள் “விஷயத்தை விசாரித்து வருகின்றனர்” என்று ஃபின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ கூறினார்.