லெபனானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – உணவுத் தட்டுப்பாடு அபாயத்தில் மக்கள்
ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
லெபனானில் உள்ள அனைத்து நிவாரண முகாம்களும் இடம்பெயர்வு மக்களால் நிரம்பிவிட்டதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், லெபனானில் பணவீக்கம் 40 சதவீதம் வரை அதிகரித்து, பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
விவசாய கூலித் தொழிலாளிகள் பற்றாக்குறை காரணமாக, விளைபொருட்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உணவுப்பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.





