இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் புயல் – போக்குவரத்து பெரிதும் பாதிப்பு
புயல் காரணமாக இங்கிலாந்தில் டெவோன் (Devon) மற்றும் கார்ன்வால் (Cornwall) பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வீடுகள், வீதிகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
டெவோனில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும், கார்ன்வாலில் இரண்டு வெள்ள அபொய எச்சரிக்கைகளும் தற்போது அமலில் உள்ளன.
வெள்ளம் காரணமாக, எக்ஸிடெர் செயின்ட் டேவிட் (Exeter St Davids) – பார்ன்ஸ்டேபிள் (Barnstaple) இடையேயான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், எக்ஸிடெர் செயின்ட் டேவிட் – ஓகேஹாம்ப்டன் (Okehampton) வழித்தடம் வார இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாற்றுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லிஸ்கார்ட் (Liskeard) – லூயி (Looe) மற்றும் பார் (Par) – நியூகுவே (Newquay) இடையேயான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.





