மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய செக் குடியரசு ஜனாதிபதி
செக் குடியரசுத் தலைவர் பீட்டர் பாவெல் மோட்டார் சைக்கிளில் காயம் அடைந்துள்ளார், ஆனால் பெரிதாக பாதிப்பு என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.
“ஜனாதிபதி தனது மோட்டார் சைக்கிளை ஓட்டும் போது காயமடைந்தார்,காயங்கள் தீவிரமானவை அல்ல, ஆனால் மருத்துவமனையில் ஒரு குறுகிய கண்காணிப்பு தேவைப்படும்.” என்று சமூக ஊடக தளமான X இல் பாவெல் அலுவலகம் பதிவிட்டது.
விபத்து ஒரு மூடிய பாதையில் நடந்ததாகவும், சாலை விபத்து அல்ல என்றும் X இல் போலீசார் தெரிவித்தனர்.
62 வயதான பாவெல், முன்னாள் செக் இராணுவத் தளபதி மற்றும் உயர்மட்ட நேட்டோ அதிகாரிஆவார்.
(Visited 37 times, 1 visits today)





