கடற்கரையில் சிலம்ப பயிற்சி இனி செல்போன் பயன்படுத்த மாட்டோம்
கோடை விடுமுறையை பயனுள்ளதாக சிலம்ப விளையாட்டில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஈடுபடுத்த ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
சென்னை வண்டலூர் அடுத்த வெங்கம்பாக்கத்தில் உள்ள வீரக்கலை சிலம்ப பயிற்சி பள்ளியில் கோடை சிறப்பு சிலம்பம் கற்கும் முகாமில் சிறுவர், சிறுமியர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை 60 பேர் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு காலை, மாலை என சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மாணவர்கள் வீட்டில் செல்போன், கணிணி என மின்ணணு பொருட்களுடன் நேரம் செலவிடுவதை விட சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டது மிகுந்த மகிழ்ச்சியையும்,தன் நம்பிக்கை, உடல் ஆற்றலை அதிகரிப்பதாக உற்சாகம் தெரிவித்தனர்.
சிறுவர்கள், சிறுமியர்கள் என பாலின பாகுபாடின்றி கலந்து சிலம்ப பயிற்சி மேற்கொள்ளும் போதும் அவர்கள் கற்றுத்தரும் மான் கொம்பு, வேல் பயிற்சிகள் முதலில் தயங்கினாலும் அந்த தயக்கம் சில நிமிடங்களில் வெளியேறிவிடுவதாக தெரிவித்தனர்.
அடிக்கும் கோடை வெயிலின் தாக்கம் வெளியே வந்தாலும் தாங்க முடியாத நிலையில் கேடை சிலம்ப பயிற்சியின் ஒரு பகுதியாக கடற்கரை ஓரமாக மணலில் ஓடியும், மணலை கைகளால் தோண்டுவது, கடல் அலைகளில் நின்றவாறு சிலம்ப பயிற்சி மேற்கொள்வது கோடைக்கு ஏற்றதுபோல் இதமான கடல் அலை பயிற்சி மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்,
பள்ளி மட்டும் அல்லாமல் கல்லூரி மாணவரும் தன்னுடைய அறிவாற்றல் அதிகரிக்க சிலம்ப பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தன் உடலில் இரண்டு கைகள், இரண்டு கால்களை ஒருகினைந்து சிலம்பம் சுழற்றும் பயிற்சியால் வலது இடது என மூளையில் இரு பிரிவுகளும் செயல்படுவதால் தனது ஆற்றல் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
கல்வியின் அவசியத்தால் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை படிப்பில் அதிகமாக ஈடுபடுத்தும் நிலையில் உடல் நலனும் முக்கியம் என இது போல் கோடை விடுமுறையில் சிலம்ப பயிற்சி அளிப்பதால் ஆண்டு முழுவதும் உற்சாகத்துடனும் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகாரிக்கும் என சிலம்ப பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
சிலம்ப பயிற்சி முகாம் நிறைவாக சிலம்ப பள்ளி ஆசிரியர் பெருமாள் மாணவர்களிடம் பேசுபோது:- ஒவ்வோரு பிள்ளைகளும் அவர்களின் தாய், தந்தையர், சகோதரன், சகோதரிகளை மதிக்க வேண்டும்.
அவர்களை உறவுகளாக பார்ப்பதை காட்டிலும் கூடுதலாக அவர்களை ஆசிரியராக எண்ணி தேவையான ஆலோசனைகளை பெற்றிடவேண்டும்.
அதுபோல ஒரு மரியாதையுடன் நடக்கும்போது பெரியவர்களும் பதிலுக்கு பக்கபலமாக முன்னேற்றத்திற்கு உதவிடுவார்கள் என நல்லெழுக்கம் தரும் ஆலோசனைகளை வழங்கி,பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார்.