டித்வா சூறாவளி – காணாமல்போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை!
BY VD
December 11, 2025
0
Comments
55 Views
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள 203 நபர்களுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பதிவாளர் நாயகம் துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார்.
திடீர் பேரிடருக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு எந்த புதிய தகவலும் இல்லாமல் ஒருவர் காணாமல் போயிருந்தால் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பேரிடரில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 611 நபர்களில் 126 பேருக்கு ஏற்கனவே இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் கூறினார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்