ரகாசா புயல் எச்சரிக்கை – பாடசாலைகளை மூடிய சீன அரசாங்கம்!
ரகாசா புயல் காரணமாக சீன அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு சுமார் 137 மைல் (220 கிமீ) வேகத்தில் காற்று வீசுவதுடன், சில இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது தெற்கு சீன பொருளாதார சக்தியாக இருக்கும் குவாங்டாங் மாகாணத்தின் கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஹாங்காங்கின் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
குவாங்டாங்கில் உள்ள ஜுஹாய் மற்றும் ஜான்ஜியாங் நகரங்களுக்கு இடையிலான கடலோரப் பகுதியில் சூறாவளி கரையைக் கடக்கும் என்று சீனாவின் தேசிய வானிலை மையம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)





