ஆஸ்திரேலியாவின் சிறிய தீவை கடந்துச் செல்லும் சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியாவின் சிறிய தீவுப் பகுதியை இன்று வெப்ப மண்டல சூறாவளி கடக்கவுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோகோஸ் (கீலிங்) தீவுகளுக்கு (Cocos) சூறாவளி கண்காணிப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும், இயன்றளவு வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி சூறாவளி கரையை கடக்கும்போது மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தீவில் ஏறக்குறைய 600 பேர் வசித்து வருகின்ற நிலையில், மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





