வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகியுள்ள புயல் – இலங்கைக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் மேகங்கள் புயலாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்து, தீவிர மழையை ஏற்படுத்தும் என்று பிபிசி தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மழைப்பொழிவு கடுமையாக இல்லாவிட்டாலும், ஏற்கனவே வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆபத்து எச்சரிக்கையை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





