பங்களாதேஷில் ஹமூன் சூறாவளி : இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
பங்களாதேஷில் ஹமூன் சூறாவளி தென்கிழக்கு கடற்கரையில் நுழைந்துள்ளதால், கிட்டத்தட்ட 2 இலட்சத்து 75 ஆயிரம் பேர் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சூறாவளி காரணமாக இதுவரை இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
வங்காளதேச வானிலை துறை நிபுணர் முஹம்மது அபுல் கலாம் மல்லிக் கூறுகையில், புதன்கிழமை அதிகாலையில் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் கடலோர மாவட்டங்களில் ஹமூன் கரையை கடந்தது, மணிக்கு 104 கிலோமீட்டர் (65 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)