கரையை கடக்கும் புயல் – இலங்கையில் மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்
இலங்கையை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்து காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 280 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்காக 360 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்றிரவு 11.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றைய தினம் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான பகுதியை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.