இலங்கை செய்தி

தற்கொலைக்கு எதிராக திருகோணமலையில் சைக்கிளோட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை இன்று வந்தடைந்தது.

இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை ரொட்டரிக் கழக அங்கத்தவர்கள்வரவேற்றனர்

தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக்கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது.

தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“நான் தனிமையாக இல்லை என்னால் பேச முடியும்” எனும் செயற் திட்டத்தின் கீழ் 1333 என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

இத் தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்ததன் பின்னர் நகரின் பிரதான கடற்கரையில் தற்கொலையின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் மாலை 05.00 மணிக்கு கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகித்தனர்.

இந்நிகழ்வில் ரொட்டரிக் கழக பொதுசன தொடர்பாடல் அதிகாரி வைத்திய கலாநிதி டொக்டர் ஞானகுணாளன், செயலாளர் பீ.ரகுராம்,திட்ட பணிப்பாளர் ஜெய்சங்கர் என பலரும் கலந்து கொண்டனர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை