கனடாவில் 06 பாடசாலைகளுக்கு இணைய வழி அச்சுறுத்தல்
கனடாவின் பிரம்டனின் ஆறு பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இணைய வழி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரம்டனின், ஆறு பாடசாலைகளை இலக்கு வைத்து சமூக ஊடகங்களின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரம்டன் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
(Visited 14 times, 1 visits today)





