பிரித்தானியாவில் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள் – முக்கிய நிறுவனங்களுக்கு பாதிப்பு!

பிரித்தானியாவில் ஒன்லைன் (online) மூலம் இடம்பெறும் மோசடிகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள ஹேக்கர்கள் இந்த மோசடிகளை மேற்கொள்ளவதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பிரித்தானியாவின் முக்கிய நிறுவனங்களாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் (Marks and Spencer), கோ-ஆப் (Co-op) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என NCSC இன் தலைவர் ரிச்சர்ட் ஹார்ன் (Richard Horne) வலுப்படுத்தியுள்ளார்.