UK கவுன்சில்களில் சைபர் தாக்குதல் – இலட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கலாம்!
கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியா (Chelsea) கவுன்சிலில் நடந்த சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.
எதிர்பாராத அழைப்புகள், செய்திகள் மற்றும் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்ட தரவின் சிறிய மாதிரிகள், அதில் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது என மேற்கு லண்டன் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கவுன்சில் ஊழியர் எனக் கூறி தனிப்பட்ட தரவுகளை கேட்பவர்கள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரவைக் கண்காணிக்க மூன்று நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பு கவுன்சிலுடன் சேர்ந்து இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழிகாட்டுதலுடன் கடிதம் அனுப்பியுள்ளனர். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கவுன்சில்கள் வெளியிட்ட தொடர்பு வழிகளைப் பன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





