CWC – தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பவுமா 24 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து டி காக்- வான் டெர் டுசென் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வான் டெர் டுசென் 133 ரன்களும் டி காக் 114 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரரான டெவான் கான்வே 2 ரன்னில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய வில் யங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 9 ரன்களையும், டேரில் மிட்செல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, மிட்செல் சந்த்னர் மற்றும் திம் சவுதீ தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜேம்ஸ் நீஷன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை, டிரென்ட் பவுல்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக களத்தில், கிளெம் பிலிப்ஸ் மற்றும் மேட் ஹென்றி இருந்தனர்.
இதில், கிளென் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேட் ஹென்றி ரன்கள் எடுக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபாரமாக வென்றது.