விளையாட்டு

CWC – தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 10-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் – பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடி வந்த டிகாக் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த கையோடு டிகாக் (109) பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முறையே 7 மற்றும் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் விளையாடி வந்த லபுஷேன் நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார்.

இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்படி போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவர் தவிர கேசவ் மகாராஜ், தப்ரிஸ் சம்சி மற்றும் யன்சன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ