புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசியின் தற்போதைய நிலை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி கேட் மிடல்டன் நலமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமது மனைவி இளவரசி கேட் மிடல்டன் நலமாக இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்காக இளவரசி கேட் சிகிச்சை பெறுவதாகச் செய்தி வெளியான பிறகு அரச குடும்பத்தில் இருந்து மிக அரிதாக வெளியிடப்பட்டுள்ள கருத்து அது.
வேல்ஸ் இளவரசி கேட் தமக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கடந்த மார்ச் 22ஆம் திகதி அறிவித்தார். சிகிக்சை பெற்று வருவதாகக் காணொளிச் செய்தியில் அவர் சொன்னார்.
மன்னர் சார்ல்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியான பிறகு மருமகள் பற்றிய செய்தி வந்தது.
(Visited 10 times, 1 visits today)