பிரான்ஸில் ஊரடங்கு விதிக்கப்படலாம் – பிரித்தானிய பயணிகளுக்கு அறிவித்தல்!
அமைதியின்மைக்கு மத்தியில் பிரான்ஸ் செல்லும் பிரஜைகளுக்கு பயண இடையூறு ஏற்படும் என இங்கிலாந்து எச்சரித்துள்ளது.
இது குறித்து பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் குறைக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பொலிசாரால் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளுர் அதிகாரகிள் ஊரடங்கு உத்தரவை விதிக்கலாம். கலவரங்கள் நடக்கும் இடங்களை கணிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





