நேபாளத்தில் போராட்டங்கள் ஓய்ந்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீக்கம்!
நேபாளத்தில் புதிதாக பெண் பிரதமர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அமைதி திரும்பியுள்ளது.
இந்நிலையில் நேபாள அதிகாரிகள் நாட்டின் தலைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தலைநகர் காத்மாண்டு மற்றும் அண்டை நாடான லலித்பூர் மற்றும் பக்தபூர் பகுதிகளில், சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டு தெருக்களில் போக்குவரத்து திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





