ஐரோப்பா

லண்டனில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும்.

லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர்.

அதேசமயம் இந்த விழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை பலர் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போதைப்பொருள் வைத்திருந்த 85 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்