CT Match 10 – ஆஸ்திரேலியா அணிக்கு 274 ஓட்டங்கள் இலக்கு

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். குர்பாஸ் முதல் ஓவரிலேயே 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து சத்ரானுடன் செடிகுல்லா அடல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய சத்ரான் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 12, ஹஷ்மதுல்லா ஷாஹிதி 20 என வெளியேறினர்.
இதனையடுத்து ரஷித் கான், ஓமர்சாய் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ரஷித் கான் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஓமர்சாய் அரை சதம் கடந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட்டும் ஸ்பான்சர், ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.