CT Match 10 – மழை காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா போட்டி ரத்து

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. செடிகுல்லா அடல் 85 ரன்னிலும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 67 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது. தொடக்கமே ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் 2 கேட்ச்சுகளை தவறவிட்டனர்.
மேத்யூஸ் ஷாட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரை சதம் எடுத்தார். அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.