CT Match 05 – இந்திய அணிக்கு 242 ஓட்டங்கள் இலக்கு

தொடரின் 5வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக பாபர் ஆசம், இமாம் உல் அக் களம் இறங்கினர்.
ஷகீல் – ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இவர்களின் பாட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த நிலையில், ரிஸ்வான் 46 ரன்னிலும் ஷகீல் 62 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.