CT Match 01 – நியூசிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றி

8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.
கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
ஆரம்பத்தில் அனைவரும் தடுமாறி விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஒருபுறம் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சல்மான் ஆகா அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.