CT Match 01 – பாகிஸ்தான் அணிக்கு 321 ஓட்டங்கள் இலக்கு

8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.
கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
4வது விக்கெடடுக்கு வில் யங் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் லாதம் 47வது ஓவரில் 95 பந்தில் சதம் அடித்தார்.
இறுதியில், 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்துள்ளது.
தற்போது, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.