தோனிக்காக CSK எடுத்த நடவடிக்கை – மீண்டும் அமலுக்கு வரும் பழைய விதி?
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு நீக்கப்பட்ட அன்கேப்ட் விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று சி.எஸ்.கே.நிர்வாகம் வலியுறுத்தியதை தொடர்ந்து, தற்போது பிசிசியை இந்த விதிகளை திரும்ப கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தோனி மீண்டும் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார்.
2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலககோப்பை தொடரை இந்திய அணி வென்றது. இதனைத் தொடர்ந்து அதிகமான டி20 வீரர்களை உருவாக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று வந்த இந்த தொடரில் கடந்த 3 ஆண்டுகளாக 10 அணிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18-வது சீசன் (2025) அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் இன்னும் ஒருசில வாரங்கள் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்து முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அணியில் முன்னாள் கேப்டன் தோனியை தக்க வைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இதில், தோனியை சென்னை அணியில் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, 2025-ம் ஆண்டுக்கு முன்னதாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை தக்க வைக்கும் அன்கேப்ட் பிரிவில் வைக்கும் பழைய விதிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று, ஃப்ரான்சைஸ் கூட்டத்தின் போது சி.எஸ்.கே. நிர்வாகம் பி.சி.சி.ஐ.யிடம் வலியுறுத்தியது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்த விதையை யாரும் பயன்படுத்தாததால், கடந்த 2021-ம் ஆண்டு பி.சி.சி.ஐ இந்த விதிளை நீக்கியது. இதனிடையே கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற ஃப்ரான்சைஸ் தலைவர்கள் கூட்டத்தின்போது, இந்த விதியை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிக ஆதரவு இல்லை என்றாலும், 5 முறை சாம்பியனான சி.எஸ்.கே இந்த விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று உறுதியாக இருந்தது.
இதன் காரணமாக இந்த விதி மீண்டும் அமல்படுத்துவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த விதி அமல்படுத்தப்பட்டால் பழைய தக்கவைப்பு கொள்கையின்படி, ஒரு வீரரை 4 கோடிக்கு தக்கவைக்கலாம். இதானால் வரும் 2025-ம் ஆண்டுக்கான சீசனில், முன்னாள் கேப்டன் தோனியை ஏலத்தில் விடாமல், சென்னை அணி குறைந்த விலைக்கே தக்கவைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் அதிக செலவு இல்லை. ஏலத்தில் முக்கிய வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்குவதில் சி.எஸ்.கே. கவனம் செலுத்தலாம்.
2022- மெகா ஏலத்திற்கு முன்னதாக 262 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றிருந்த எம்.எஸ்.தோனி ரூ12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். 42 வயதான அவர் கடந்த சீசனில், ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்துவி்ட்டு ஒரு வீரராக களமிறங்கிய பல சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் ப்ளேஅப் வாய்ப்புக்கான கடைசி ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் சென்னை அணி தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது.