கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு – உலக வங்கி எச்சரிக்கை
கச்சா எண்ணெய்யின் விலை 75 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட எதிர்பாராத அதிரடித் தாக்குதலால் எண்ணெய் விலை அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
பொருளியல் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸுக்குள் இஸ்ரேல் நுழைந்த பிறகும் எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் போரின் போக்கை பொருளியல் நிபுணர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு இவ்வட்டாரத்தில் ஏற்பட்ட பூசல்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வட்டாரத்துக்குப் பரவினால் பொருளியல் பாதிப்பு எப்படியிருக்கும் என்பதை அவர்கள் நிர்ணயித்து வருகின்றனர்.
“போர் மோசமடைந்ததால் பத்து ஆண்டுகளில் முதல் முறையாக உலகப் பொருளியலுக்கு இரட்டை எரிபொருள் பாதிப்பு ஏற்படும்,” என்று உலக வங்கியின் தலைமை பொருளியல் மற்றும் பொருளியல் மேம்பாட்டுக்கான மூத்த உதவி தலைவர் இன்டெர்மிட் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.
தற்போது பீப்பாய் ஒன்றின் கச்சா எண்ணெய் விலை 85 டொலர் என்ற அளவில் உள்ளது. இந்த காலாண்டில் அதன் சராசரி விலை 90 டொலருக்கு அதிகரிக்க வாய்புள்ளது.