திருகோணமலையில் விபச்சார நிலையத்தை சுற்றிவளைத்த மக்கள் – சிக்கிய இளம் பெண்கள்

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையமொன்று நேற்றிரவு (31) அப்பிரதேச மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்பின் போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒப்படுக்கப்பட்ட இருபெண்களும் 25,30 வயதுடையவர்கள் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்
ஒப்படைக்கப்பட்ட பெண்களை தாம் கைது செய்துள்ளதாகவும் இரு பெண்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்
(Visited 10 times, 1 visits today)