குரேஷியாவின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!
குரேஷியாவின் பாராளுமன்றம் இன்று (14.03) கலைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இவ்வாண்டு இறுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்வில் இருந்த 151 சட்டமன்ற உறுப்பினர்களில் 143 பேர் பாராளுமன்றம் கலைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தேர்தல் திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஜூன் 6-9 திகதிகளில் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே இது நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் பரிந்துரைத்துள்ளார்.
குரோஷியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)