உலகம் செய்தி

இந்திய பிரதமருக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்

பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா புறப்பட்டார். குரோஷியா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குரோஷியா பிரதமர் பென்கொவிக், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது, வரலாற்றில் முதல்முறையாக அச்சிடப்பட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை பிரதமர் மோடிக்கு பென்கொவிக் பரிசளித்தார்.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஞ்ஞானியும், மிஷனரியுமான பிலிப் வெஸ்டின்(1748–1806) லத்தீன் மொழியில் 1790ம் ஆண்டு எழுதி முதல் முறையாக அச்சிட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கினேன்.

“இது குரோஷியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஆரம்பகால கலாசார உறவுகளின் அடையாளமாக விளங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!