ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட டிராகன்: ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு
ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட டிராகன் விக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அல்லது அழிந்துபோகும் நிலையில் இருக்கும் டிராகன்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1969 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏர்லெஸ் டிராகன் என்று அழைக்கப்படும் 15 செமீ நீளமுள்ள விலங்கை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்னுக்கு மேற்கே உள்ள புல்வெளிகளில் ஏராளமாக இருந்த இந்த இனம், வாழ்விட உருவாக்கம் மற்றும் வேட்டையாடுதல் காரணமாக அழிந்துவிட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், இவ்வகை விலங்குகள் இன்னும் எஞ்சியுள்ளமை தெரியவந்துள்ளதாக விக்டோரியாவின் சுற்றாடல் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், அது எங்கு கிடைத்தது என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இந்த அற்புதமான கண்டுபிடிப்பு உலகில் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் ஒரு இனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வாய்ப்பாகும், என்றார்.
மிருகக்காட்சிசாலை விக்டோரியா 2017 முதல் இந்த வகை டிராகனைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
இது குறித்து உயிரியல் பூங்காவின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், இந்த வகை விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டது மிகவும் சிறப்பான விஷயம்.