கடந்த ஆண்டில் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போர்த்துகீசிய கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐந்து முறை பலூன் டீ ஓர் விருதபெற்ற அவர், 2023 ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டில் மொத்தம் 54 கோல்கள் போட்டு சாதனை படைத்துள்ளார்.
வரும் ஆண்டிலும் சாதனைகள் தொடரும் என்கிறார் மகிழ்ச்சி பெருமிதத்துடன்.
பேயர்ன் மூனிச் மற்றும் இங்கிலாந்து கால்பந்து வீர்ரான ஹைரி கானே (52 கோல்கள்), பிஎஸ்ஜி மற்றும் பிரான்ஸ் முன்னிலை ஆட்டக்காரரான கிளியன் மாஃபி (52 கோல்கள்), மான்செஸ்டர் சிட்டி மற்றும் நார்வே அணி வீர்ரான எர்லிங் ஹாய்ன் (50 கோல்கள்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ 2023 ஆம் ஆண்டில் 54 கோல்கள அடித்து சாதனை புரிந்துள்ளார்.
கால்பந்து விளையாட்டில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த்து மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்த ஆண்டும் சாதனை புரியமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் செளதி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கால்பந்து போட்டியில் ஓராண்டில் 54 கோல்கள் போட்டு சாதனை படைத்தது என்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 2023 எனக்கு ஒரு நல்ல ஆண்டாக இரு அந்த்து. இதற்கு எனது தனிப்பட்ட முயற்சியுடன் கூட்டு முயற்சியும் காரணமாக அமைந்தது. அல்-நாஸர் மற்றும் தேசிய அணிக்காக நான் பலவிதங்களில் உதவியுள்ளேன். அடுத்த ஆண்டும் சாதனைகள் தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரேபிய கால்பந்து அணியான அல்-நாஸர் கால்பந்து அணியில் சேர்ந்த்திலிருந்தே ரொனால்டோ சிறப்பாக ஆடி வருகிறார். 50 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடி 44 கோல்கள் போட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் செளதி புரோ லீக் சீசனில் அவர், தனது திறமையை நன்கு வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டிகளில் அவர் 18 போட்டிகளில் 30 கோல்கள் போட்டுள்ளார்.
அல்-நாஸர் அணியில் சேருவதற்கு முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 2021 இல் மீண்டும் சேர்ந்தார். ஆனால், அந்த அணியில் அவர் வெகுநாள் நீடிக்கவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளர் எரிக் டென் ஹக்கை கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக பேட்டியும் அளித்திருந்தார். இதையடுத்து அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இருந்தபோதிலும் மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 54 போட்டிகளில் 27 கோல்கள் போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.