சிங்கப்பூர் மக்களுக்கு அடுத்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி!
சிங்கப்பூரில் வீடுகளுக்கான சொத்து வரி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட எல்லா வகை வீடுகளுக்குமான வரி இவ்வாறு உயரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஏதுவாக அரசாங்கம் ஒரே ஒருமுறை அந்த வரிக்கு 100 விழுக்காடு வரை கழிவு வழங்கவிருக்கிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தனியார் வீடுகள் இரண்டுக்கும் வரி உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓரறை, இரண்டறை வீடுகளில் வசிப்போர் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான சொத்து வரி செலுத்தத் தேவையில்லை. வீட்டு வாடகையும் சொத்துகளின் ஆண்டு மதிப்பும் உயர்ந்துள்ள வேளையில் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
மூவறை அல்லது அதற்கும் பெரிய கழக வீடுகளில் வசிக்கும் உரிமையாளர்களுக்கு, அடுத்த ஆண்டு சொத்து வரி உயர்வு, மாதத்துக்கு 3 வெள்ளிக்கும் குறைவாகவே இருக்கும். அந்த உயர்வும் இயல்பாகவே தள்ளுபடி செய்யப்படும்.
தனியார் வீட்டில் குடியிருக்கும் உரிமையாளர்களுக்கான சொத்து வரியும் தள்ளுபடி செயப்படும்.