ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீர்மானம்

ஜெர்மனியில் பல முக்கியமான வேலைத் துறைகளில் புலம்பெயர்ந்தோர் பெரும் பங்கு வகிக்கும் நிலையில் பல துறைகளில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகின்றது.
கட்டுமானம், உணவு உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் புலம்பெயர் ஊழியர்களாகவோ உள்ளனர்.
தபால் சேவைகள், கொரியர் வேலைகள் மற்றும் ஹோட்டல்களிலும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.
பலர் இறைச்சி பதப்படுத்துதல், முதியோர் பராமரிப்பு மற்றும் உலோக கட்டுமானம் ஆகிய தொழிலகளிலும் ஈடுபடுகின்றனர்.
மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் முதியோர் இல்லங்களில், சுமார் 30% பணியாளர்கள் குடியேற்ற பின்னணியைக் கொண்டுள்ளனர்.
இருப்பினும், பொது நிர்வாகம், காப்பீடு மற்றும் கல்வி ஆகியவற்றில் குறைந்தளவான புலம்பெயர்ந்தோரே உள்ளனர்.
மேலும், அரசாங்கம், பொலிஸ், நிதிச் சேவைகள் மற்றும் எரிசக்தி வழங்கல் ஆகியவற்றிலும் குறைவான புலம்பெயர்ந்தோர் உள்ளனர்.
தற்போது, தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருவதால் புலம்பெயர்ந்தோர் உள்ளீர்க்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.